பயித்தியம்

பயித்தியம்.

அவள் சிரிப்பு ஒன்றே
போதும்
பகல் கனவில் நான்
மிதந்திடுவேன்

அவள் பார்வை ஒன்றே
போதும்
என் மேனி எல்லாம்
சிலிர்த்து விடும்

அவள் இடை அழகு
தெரிந்தால் போதும்
என் கண் இமைகள்
மூட மறந்து விடும்

அவளை நான் ஒரு நாள்
பார்க்காவிட்டால்
பயித்தியமே பிடித்து விடும்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (26-Oct-23, 12:43 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 57

மேலே