உனக்காக காத்திருக்கிறேன் நான் 555
***உனக்காக காத்திருக்கிறேன் நான் 555 ***
உயிரானவளே...
தொலைவில் மழைமேகம்
தூறல் போட்டாலும்...
வீசும் தென்றலில்
மண்வாசனை மிதந்துவரும்...
கடல் கடந்து நீயும்
நானும் தனித்திருந்தாலும்...
வீசும் காற்றில் என் சுவாசம்
உன்னை வந்து சேரும்...
பார்த்தது எத்தனை நாள் நாம்
பேசி பழகியது எத்தனை நாள்...
உள்ளூர ஊறும் அன்பின்
ஊற்றே நம்மை சேர்த்ததடி...
சமுத்திரத்தில் நான் பாதம்
நனைக்கும் போதெல்லாம்...
என்
உள்ளத்தில் ஒரு உணர்வு...
இக்கரையில் நான்
அக்கரையில் நீயும்...
உன் பாதம்
நனைப்பாய் என்று...
உனக்கு பிடித்த மல்லியின்
நறுமணத்தை நான் நுகர்கிறேன்...
நீ உதட்டில் பூசும்
ரோஜாவின் வண்ணத்தை...
பன்னீராய் என்
மேனியில் தெளிக்கிறேன்...
உன்னை வந்து சேரும்
நாட்களுக்காக காத்திருக்கிறேன்...
என்
உயிரில் கலந்த உறவே.....
***முதல்பூ.பெ.மணி.....***