மனிதரும் மலர்வண்டும்

மலரின் மதுவெல்லாம் முழுவதும் பருகி
மலரின் மடிமீது மயங்கி கிடந்து
விழித்ததும் பறந்து செல்லும் வண்டு
ஒருபோதும் மலரின் மென்மை மேன்மைப்
பற்றி சிந்தித்ததோ இல்லவே இல்லை
அதுபோல்தான் பெண்ணின் உறவில் வெறும்
மோகமும் காமமும் காணும் மனிதன்
அந்த காம உறை கீழே அவள் மென்மை
உள்ளம் அன்பை மட்டுமே தேடுவதைக்
கண்டு கொள்வதில்லையே வண்டுபோல
எத்தனை சிறிய உள்ளம் இவர்க்கு !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Oct-23, 6:17 am)
பார்வை : 57

மேலே