பாராய் பாவையெனும் பூந்தேர்

தூரிகையால் நான்வரைந்தேன் ஓவியத்தில் உன்னெழிலை
சாரல் நனைக்குது பூவுடலை பூமழையால்
காரெழில் கூந்தலில் நீர்த்துளிகள் மின்னிட
பாராய்பா வைப்பூந்தே ரை

தூரிகையால் நான்வரைந்தேன் சித்திரத்தில் உன்னெழிலை
சாரல் நனைக்குது பூவுடலை பூமழையால்
காரெழில் கூந்தல் தனில்நீர்த் துளிமின்ன
பாராய்பா வையெனும்பூந் தேர்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Oct-23, 9:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே