பெண்ணைப் போற்றுவோம்
தெய்வத்தைப் பெண்ணுருவில் தொழுகின்றார்
அலைமகளாய், மலைமகளாய், மலர்மகளாய்
காளியாய், துர்கையாய், பவானி அம்மனாய்
இன்னும் அபிராமி அம்மனாய், மீனாட்சியாய்
காமாட்சியாய், கன்னிகாபரமேஸ்வரியாய்
இன்னும் ஆயிரம் ஆயிரம் உருவங்களில்
நாள் தோறும் ஆண்டு தோறும் விழாக்கள்
கொண்டாட்டம் .......
நிஜ வாழ்க்கையில் இவர்கள் பெண்ணை
பின் ஏன் கொச்சப் படுத்துகிறார் துச்சமாய் நினைத்து
வீட்டுப் பெண்ணில் தெய்வத்தைக் கண்டால்
காணும் பெண்ணில் எல்லாம் தெய்வம் காண்பார்
அந்நாள் எந்நாளோ அன்றே பெண் இந்நாட்டில்
துன்பமற்று சுதந்திர பறவையாய் வாழ்வாள்
ஆணிற்கு பிறவித்தரும் பெண் என்றும் தெய்வம்
பெண் என்றும் நாம் வணங்கும் தாய், தெய்வமாகும்