இறைவன்
தாய்த் தன்னை சேய் அணைக்கும் போது
புளகாங்கிதம் அடைகிறாள் அதுபோல
இறைவனும் பெருமகிழ்ச்சி கொள்கின்றான்
அவன் படைப்பாம் மனிதர் அவனை
அவன் நாமம் சொல்லி பக்தியால் அணைத்திட
தாயல்லவோ நம்மைப் படைத்தவன்