தனிமையில் இனிமை

தன்னந் தனியாக தனித்து
இருந்தால் இனிமை இனிதாக
இளைப்பாறும் என்மன மேடையில்....

துயிலும் இனிமையை அலுங்காமல்
அரவணைத்து ஆனந்தம் கொள்வேன்
இனிதே இளைப்பாறும் யென்மனம்....

தனிமைக்கு ஈடில்லை வேறொன்றும்,
ஆனந்தம் குடிகொள்ளும் அவ்வப்போது
பெரும் இனிய தனிமையில்...

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும்
நஞ்சுதானே தனிமையும் அஃதே,
கூடி வாழ்கையில் கிடைத்திடும்

தனிமை அமிர்தம், வாழ்க்கையே
தனிமையில் களிக்கும் சூழலில்
எட்டிக் காயாக கசக்கும்......

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Oct-23, 9:54 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : thanimayil enimai
பார்வை : 50

மேலே