இறைவனும் எண்ணலையே

துப்பாக்கிக் குண்டால
துன்பத்தையும், துயரத்தையும்
விதைக்க முடியுமே தவிர
வாழும் மக்களின் கண்ணத்தில்
வழியும் கண்ணீரைத்
துடைக்க முடியுமா ?

தலைவர்களையும்,
தேசத் தியாகிகளையும்
சமூகத்தையும், நாட்டையும்
சீரழிக்கும், துப்பாக்கியும்,
பீரங்கியும் உலகிற்கு ஒரு
துர்பாக்கியம் தான்

வாழவேண்டிய மக்களை
வாழவிடாமல் வதைப்பது
பாவமல்லவா ?
பெற்ற தந்தை இல்லாமல்
பெண்களும், குழந்தைகளும்
பிழைத்தால் வாழ முடியுமா?
இறைவனும் எண்ணலையே!

எழுதியவர் : கோ. கணபதி (29-Oct-23, 5:24 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 57

சிறந்த கவிதைகள்

மேலே