காமராஜர்
முனைவர் த.சங்கரன்,
பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சேலம்-106.
*காமராஜர்*
படிக்காத மேதை – ஆனால்
இன்றையக் கல்வியின்
ஆழமான வித்து… காமராஜர்
பள்ளியின் புகைப்படம் காணாதவர் – ஆனால்
இவர் படம் இல்லாத
பள்ளிக்கூடங்களே இல்லை… காமராஜர்
அன்று அலிபுரச் சிறைக்கண்டவர் – ஆனால்
இன்று எல்லோர் மனதிலும்
ஆழமாகச் சிறப்பட்டவர்… காமராஜர்
தீரர் சத்தியமூர்த்தியிடம் நட்பு கொண்டவர் – ஆனால்
சாகும் வரை சாதிக்காக
சத்தியம் செய்யாதவர்… காமராஜர்
அன்று மார்மளவுத் தண்ணீரில்
கயிறு பிடித்துச் சென்றவர் – ஆனால்
ஏழைகளின் கண்ணீர் துடைக்கப் பாடுபட்டவர்…. காமராஜர்
பதவியைத் தேடிப் போனவர் அல்ல – ஆனால்
தேடி வந்த பதவியை
துச்சமாக நினைத்தவர்… காமராஜர்
தொழில் எதுவும் செய்யாதவர் – ஆனால்
பல தொழிற்சாலைகளை
நாட்டில் உருவாக்கியவர்… காமராஜர்.