சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 78
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 78
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் சங்கரநாராயணர்
தலப் புராணத்தை
படித்தோரும் பகிர்ந்தோரும்
கருத்தை தெரிவித்தோரும்
நினைத்தப் பலன்களையடைந்து
சிவபெருமான் திருவடிக்கன்யுடையராவர்
புராணத்தைப் படித்தோர்
முதுமையான சிவனடியார்க்கு
உதவிகள் செய்தால்
அசுவமேதஞ்செய்தப் பிரயோசனைப் பெறுவர்
இப்புராணம் படித்தோர்
நீங்காத பொருளை சம்பாதித்து
கவலையின்றி துன்பமின்றி
மகிழ்வுடன் வாழ்வர்
உலக ஆசைகள்
அனைத்தும் மறந்து
இறையாசையுடன் மனிதநேயம்
கொண்டு வாழ்ந்திட
வணங்கி விடை பெறுகிறேன்
எனக்கு துணையிருந்து
இக்கதையை கவிதையாக
படைத்திட அருள்புரிந்த
மாதா பிதா குரு தெய்வம்
அனைவருக்கும் நன்றி.....
சங்கரலிங்கர் திருவடிகள் வாழ்க!
சங்கரநாராயணர் தலப் புராணம் முற்றிற்று
கதை உதவி:
ஜமீன் அழகாபுரி. திருமதி .பா. பூமாரி நாச்சியார்
வர்ணனை கவிதை உதவி : செல்வி ஞான . அ. பா. அனுஷ்கா
எதுகை மோனை சாந்த உதவி: செல்வன் ஞான . அ. பா. கெளசிக் சாஸ்னு
படங்கள் உதவி: சங்கரன்கோவில் சங்கரநாராயணர் பக்தர்கள்
என்றும் உங்கள் மக்கள் நல மருத்துவப் பணி மற்றும் சமூக நல எழுத்தாளர்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்