பொல்லாத மனதின் துளிகள்

பொல்லாத மனதின் துளிகள்

சம்பவங்கள் எதுவும்
நிலையாய் நிற்பதில்லை

அடுத்த நொடிக்குள்
ஆயிரம் அசைவுகளுடன்
கடந்து கொண்டுதான்
இருக்கிறது

இருந்தும் ஏனோ
என்றோ நடந்த
நிகழ்வை எண்ணி
நாளும் பரிதவிக்குது
மனம்

அந்த நிகழ்வு
இனி
வராது என்பது
தெரிந்தும்


இருப்பவைகள்
வெறும் இருப்பாகத்தான்
இருக்கிறது நம்
அருகில்

உயிருள்ளவையோ
இல்லை உயிரற்றைவையோ

இழப்பவைகளை
மட்டுமே
இன்பமாய் நினைக்கின்றது
மனம்
அது ஏனோ?

எல்லா காட்சிகளை
கண்கள் கண்டாலும்
மனம் மட்டுமே
முடிவு செய்கிறது
தன்னுள் எதை
ஏற்கவேண்டும் என்பதை

சமூக நிகழ்வின்
சந்தை என்பது
மனிதர்களின்
மன அசைவுகள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Oct-23, 11:00 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 232

மேலே