சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 75

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 75
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் ஆடித் தவசு 3 ஆம் நாள் சிம்ம வாகனத்தில் அம்பாள் பவனியின் சிறப்பு :-
●●●●●●●●●●●●●●●●●●●
காலையில் அம்பாள் சிவலிங்கம் அபிஷேகம்/ அலங்கார வீதியுலா
இரவு சிம்ம வாகனத்தில் வீதியுலா

தீயோர்களை அழித்து
நல்லவர்களைக் காப்பதை அறிவுறுத்தும் வாகனம்
சிம்ம வாகனம்.
சிம்ம வாகனத்தில்
எழுந்தருளும் ஸ்ரீ கோமதியம்பிகை தரிசித்தால் நமக்கு
எதிரிகளின் தொல்லை
இருக்காது என்பது ஐதிகம்.

சிம்மம் பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு முறையே
ஆண் சிங்கம்
இணையுடன் இணையும்
பெண் சிங்ம்
குட்டிப் போடும்
சிம்மத்தின் வலிமைக்கு
இதுவே காரணம்

மனிதனும் சிம்மத்தைப் போன்று
பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க
உணர்த்தவேச் சிம்ம வாகனம்

சிங்கம் வலிமைக்கும்
தலைமைப் பொறுப்புக்கும்
சின்னமாக விளங்கும்
எதிரிகளை வீரத்துடன்
தாக்கி அழிக்கும்

சிம்ம வாகனத்தில்
பவனி வரும்
உமையவளைத் தரிசிக்க
தீயசக்திகளைத் தாக்கி
அழித்து வாழ்க்கையில்
வசந்தம் தருவாள்.......

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (4-Oct-23, 6:21 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 10

மேலே