மாற்றிக் கொண்டதோ

ஆதி மனிதன் பூமியில்
அவதரித்தபோது
இயற்கையோடு ஒன்றி
உயிர் வாழ்ந்தான்,
பார்த்த மிருகங்களின்
பண்புகளைக் கண்டு
தானும் அதுபோல
தரணியில் நல்லவனாக
தரத்தோடு வாழ்ந்தான்

உயிர் காத்த மண்ணும்
வாழவைத்த ஆறுகளும்
உருமாறி, திசைமாறியதால்
வழிபட்டு வாழ்ந்த மக்களின்
உயிரை பறித்து, அழிப்பது
வாடிக்கையாகிப் போனது,
இன்றைய மக்களின் பண்பை
இயற்கை பார்த்து—தன்னை
மாற்றிக் கொண்டதோ !

எழுதியவர் : கோ. கணபதி (3-Oct-23, 12:14 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : maatrik kondatho
பார்வை : 31

மேலே