சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 74

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 74
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் ஆடித் தவசு 2 ஆம் நாள் காமதேனு வாகனத்தில் அம்பாள் பவனியின் சிறப்பு :-
●●●●●●●●●●●●●●●●●●●
காலையில் அம்பாள்
சிவலிங்க தரிசன
அவதாரத்தில் வீதியுலாவும்

இரவில் உமையவள் காமதேனு
வாகனத்தில் பவனி வருவாள்

தேவலோகத்தில் வசிக்கின்ற பசுவான
காமதேனுப் பெண்ணின் முகமும்
பசுவின் உடம்பும் கொண்டது
பாற்கடலில் பிறந்தது இந்தப்பசு
கற்பக விருட்சம் போல்
கேட்டதை எல்லாம் வாரிக்
கொடுத்திடும் தன்மைக் கொண்டது

உலகத்தின் தாயானக் காமாட்சி
அன்னையே காமதேனுவாக இருந்து
கேட்டதை நமக்குத் தருகிறாள்

ஆடி இரண்டாம் திருநாளில்
அம்பாள் காமதேனு வாகனத்தில்
வலம் வரும்போது வேண்டினால்
வேண்டும் வரம் கிடைக்கும்

மிருகங்களின் மலத்தால்
மனிதனுக்கு நோய்கள் பரவும்
ஆனால் , பசுவின் சாணத்தை
அன்று வீட்டின் தரையை
அழகாக பெண்கள் மெழுகிட
வீட்டினுள் பூச்சிகள் நோய்க்கிருமி அண்டாது ஒரு போதும்

பசு இருக்கும் வீட்டிற்க்கு
சுபலட்சுமித் தேடி வருவாள் ....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (2-Oct-23, 6:06 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 14

மேலே