சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 73
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 73
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் ஆடித் தவசு 1 ஆம் நாள் சப்பர பவனி சிறப்பு :-
●●●●●●●●●●●●●●●●●●●
முகபாடம் சாத்திய யானை
கோமதி முன் செல்ல
சோடி நாயணங்கள் வாசிக்க
மேள வாத்தியம் அதிர
செம்மொழியில் அம்பாளின்
மூல மந்திரத்தை
நா உச்சரிக்க
சப்பரத்தின் முன் ஒரு குழு
வேதங்கள் முழங்கியவாரு
சப்பரத்தின் பின்பக்கம் ஒரு குழு
சப்பரத்தில் பூமாலை
முழுமேனி மறைக்க
கருவானத்தின் பெளர்ணமி
சந்திரனாக அம்பாள்
முகம் புன்னகை தவழ
காட்சி தருவாள்
வயது நோய் கர்ப்பகால
பக்தர்கள் கோவிலுக்குச் சென்று
பார்வதியை வழிபட இயலாது
திருவிழாக் காலத்தில் மற்றவர்களை
போன்று தெய்விகக் காட்சிக் கண்டு
தெய்வத்தின் அருள் பெற்றிட
சுவாமிப் பவனி வரும் வலக்கம்
கற்சிலைத் தேர் பவனியாக
எடுத்து வர இயலாது
செம்புக் கலந்த விக்ரகங்கள்
மின்சாரத்தைக் கடத்தி விளக்குகளை
விரைவில் எரிய வைக்கும்
இறைச் சக்தியேனும் மின்சாரம்
இறைபக்கதர்களை விரைவில் அடையவே
செம்பு கலந்த உலோகச்
சிலைகளாக சப்பரத்தில் பவனி வருவார்கள்..
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்