சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 72

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 72
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் தலத்தில் தேரோட்டம் சிறப்பு :-
●●●●●●●●●●●●●●●●●●●
கருமேக நீர்ப் பெருக்கி
காங்கேயம் காளைக் கொண்டு
பக்குவமாக உழவுச் செய்து
பளிச்சிடும் நட்சத்திரமாக
விதை நடுவர்
பசுந்தாள் தயாரித்துப்
பயிருக்கு உரமிடுவார்
தாமிரபரணி நீர்ப் பாய
நெல் விளையும்
சங்கரன்கோவில் ஊரினிலே

ஆறுசட்டம் நூறுமணி
அசையக் குலுங்கிடும்
மணி ஓசையுடன்
மழலைக் கிருஷ்ணன்
மண்ணில் ஊர்ந்து
வரும் அழகாக
வீதியில் தேரோட
பூமழைச் சொறிய
பக்தர் கையெடுக்க
வருவாள் ரதம் ஏறி
ஆவுடைத் தாய்
ரதவீதி நான்கும்
கடப்பாள் வருடம்
இரு முறை

தேரோடும் வீதியில்
தேகம் சூழ
புது வண்ண
புடவைக் கட்டி
புல்லாங்குழல் கையில்
புது வளையலிட்டு
கருமேகக் கூந்தலில்
கருநாகம் படமெடுப் பதாக
வைத்திட்ட மல்லிகைப் பூவை
வாலிப வண்டுகள்
தேன்னெடுக்க சுற்றி,
சுற்றி வரும்
தேர் முன்
துள்ளிக் குதிப்பார்
தேரோடும் சங்கையில்

மழலைச் செல்லங்கள்
மூத்தோர் ஆடிடும்
ஆட்டத்தையும் தேரில்
அம்பாள் ஆடி
அசைந்து வருவதைக் கண்ட
அழுகுக் குழந்தைகளின்
ஆனந்தப் புன்னகையால்
கார்மேகம் கரைந்து
கனமழையும் பொழிந்திடும்
அம்பாள் அருளால்..

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Sep-23, 6:17 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 15

மேலே