ரோஜா திசைபார்த்துச் சொல்லிவள் தென்படுகின்றாளா

வசந்த இளந்தென்றல் வீசிடும் மாலை
அசைந்தாடும் தூய அழகுமலர் ரோஜா
திசைபார்த்துச் சொல்லிவள் தென்படுகின் றாளா ?
அசைந்தாடல் போதும் நிறுத்து

---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

அடியெதுகை ---வச அசை திசை அசை

சீர் மோனை 1 3 ஆம் சீரில் வ வீ அ அ தி தெ
ஈற்றடியில் அ நி மோனை இல்லை . பொருள் இனிமை
ஆதலால் அ ஆம் மோனை வருமாறு மாற்று ஈற்றடி
கீழே தந்திருக்கிறேன் யாப்பார்வலர்கள் கவனிக்க

---அசைந்தா டியதுபோதும் ஆம்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Nov-24, 6:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே