அவன்
யாருக்காகவும் நான் எதுவும்
செய்வதில்லை
எனக்காகவே இங்கு யாவும்
செய்கிறான்
வீசும் தென்றலில் மோதும் அலையினில்
உறையும் பனியில் விரியும்
மலரில்....
இருளே இல்லாத ஒளி
ஆகிறான்
ஓய்வே இல்லாத காலம்
ஆகிறான்..
உருவாகிறான்....
உருமாருவான்.....
உருவமே இல்லாத....
பொருளாகிறான்