பிழிந்து வைத்த சோறு காட்டும் கதாநாயகர்கள்

பிழிந்து வைத்த சோறு காட்டும் கதாநாயகர்கள்

பிழிந்து வைத்த சோறு
இரவு வரை
தாங்கும்
எண்ணத்தில்
இன்னும் ஏராளமான
இந்திய குடும்பங்கள்

எனக்கு இது
போதும் முழு மனதாய்
ஒப்பும் அப்பா

தனக்கு என்று
ஒதுக்கி வைத்து
புதியதை படைக்கும்
அம்மா

எல்லோரும்
பங்கிட்டு கொள்வோமே !
பெற்றோரையும் சுடு
சோறு ருசிக்க நினைக்கும்
குழந்தைகள்

ஏழ்மையிலும் சுகம்
காட்டும்
இந்த கதாநாயகர்கள் ...!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Nov-23, 9:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 26

மேலே