அற்புதமான கவிதை ஒன்று
🌹🪷🌹🪷🌹🪷🌹🪷🌹🪷🌹
*மலர்களுக்கு*
*ஒரு பாமாலை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🌹🪷🌹🪷🌹🪷🌹🪷🌹🪷🌹
*பூக்கள்*
இயற்கை எழுதிய
கவிதைகளில்
இதுவே மிகவும்
புகழ்பெற்ற கவிதை.....
வாழ்க்கை தத்துவத்தை
சொல்லும்
மிகப்பெரிய ஞானி....
தாவரங்களின்
கர்ப்பப்பை.....
காதலை
ஒருவர்
மற்றொருவரிடம் சொல்ல
கொடுக்கப்படும்
எழுதாதக்கடிதம்......
திருமணங்களை
மட்டுமல்ல
மன்மத லீலைகளையும்
தலைமை தாங்கி
நடத்துவதில்
முதன்மையானது......
வண்டுக்களின்
மது கிண்ணம்......
பட்டாம்பூச்சிகளுக்கு
தேன் கிண்ணம்......
மணவறைக்கு
வரவேற்பதும் பூக்கள் தான்...
கல்லறைக்கு
வழியனுப்பி
வைப்பதும் பூக்கள் தான்....
பூக்களை பறித்த
மனிதர்களை விட ....
மனிதர்களின்
மனங்களை பறித்த
பூக்கள் தான் அதிகம்....
காலையில் பிறந்து
மாலையில் இறந்தாலும்
எந்த கவலையும் இன்றி
வாழ்ந்து விடுகிறது....
சாமிக்கு போட்டாலும் சரி
சவத்துக்கு போட்டாலும் சரி
வேறுபாடு பார்க்காமல்
மணம் கொடுக்கும்
சமத்துவத்தின் மறு உருவம்..
*கவிதை ரசிகன் குமரேசன்*
🌹🪷🌹🪷🌹🪷🌹🪷🌹🪷🌹