முதுமை

முதுமை

மனிதம் இனிது முதுமை அமுதம் /
மெழுகுவர்த்தியாக பிள்ளைகளுக்காக உருகி வாழ்வில் /
ஒளிதந்த முதுமைகள் அனைந்ந தீபமாக/
ஓரம் கட்டும் அனாதையாக அவலங்கள் /

நீ சிரித்தால் புன்னகை செய்வாள்/
நீ அழுதால் அவள் கண்ணீர் வடிப்பாள்/
நீ சிறகடிக்க உதிரும் தந்து /
நீ உயர கரம்யிழந்த முதுமைகள் /

கருப்பையில் சுமந்தவளை தவிர்க்க விட்டு/
கருவறை தெய்வங்களை வணங்குவது ஏன் /
சொர்க்கம் எங்கும் இல்லை தேடாதே/
சொர்க்கம் தாயின் காலடியில்தான் இருக்கிறது /

மார்பிலும் தோலிலும் சுமந்தவளை சுமையாக /
முதுமையாக நினைப்பதால் மழைக்கு
முளைக்கும் /
காளனாக வளர்க்கிறது முதியோர் இல்லம் /

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Nov-23, 7:28 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : muthumai
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே