தாயில்லா நானில்லை

உன்னை அவள் பாக்கேயில்ல
அவள நீயும் பாக்கேயில்ல
கொடியில பூத்த பிள்ளைய
வயிற்றில் சுமந்தாளே
உள்ளே நீ குதி குதிக்க
துடிப்பு தந்தாளே
உன் உடலை சமச்சு
நீ உயிரெடுக்க
தவம் இருந்தாள்
பத்து மாசம் சுமந்து
பகலிரவு காத்திருந்து
பெத்தெடுத்த முத்துக்கு
பெயர் வைப்பாள்
செல்லமே செல்லமேன்னு
வாய் நிறய கூப்பிட
தாய் அன்பு பரிசளிக்க
தங்கை தம்பி உறவாட
குடும்பம் உலகம் நாடா
தலைமுறை தலைமுறையாய்
தாயன்பு முதன்முறையாய்
தாயில்ல நானில்லை

எழுதியவர் : Rskthentral (15-Nov-23, 10:18 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 95

மேலே