கடமை கண்ணியம் பாசம்
கடமை கண்ணியம் பாசம்
××××××××××××××××××××××××××
தந்தையான காவலாளி ஊருக்கு நண்பர் /
தமயனுக்கு இருந்ததில்லை நல்லதோர் அன்பராக /
பாசக் கை விலங்காய் காலினை /
பற்றிக் கொள்ள கல்லான காவல்துறை /
நெஞ்சம் பாசத்தில் பஞ்சாக மாற /
நேசமுடன் மகனை கட்டி அணைத்து /
தாமரைக் கன்னத்தில் முத்தமிட்டு கடமை /
தவறாத காவலாளி பணிக்கு செல்வார் ./
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்