மதுக்கிண்ணம் கவிழ்ந்து முத்துக்கள் சிந்துது
இதழிரண்டின் கவிதை இன்னிசையை பாடுது
உதடுகளின் சிவப்பு ஓவியத்தைத் தீட்டுது
அதரத்தில் அந்தி அருஞ்சிவப்பு சிரிக்குது
மதுக்கிண்ணம் கவிழ்ந்து முத்துக்கள் சிந்துது
---காய் மா காய் விளம் என்ற வாய்ப்பாட்டில்
எதுகை மூன்றாம் சீர் மோனை அழகும்
பொலியும் கலிவிருத்தம்
இதழில் கவிதை இசையினைப் பாட
உதட்டினில் செஞ்சிவப்பு ஓவியத்தைத் தீட்ட
மதுக்கிண் ணமோகவிழ்ந்து முத்துக்கள் சிந்த
அதரத்தில் அந்தி அழகு
---பாவின விருத்தம்போல் எளிதல்ல வெண்பா
வெண்பா கட்டுக் கோப்பான தளைவிதிகள் கொண்டவை
அதற்கேற்ப்ப மாற்றப்பட்ட இன்னிசை வெண்பா
இதழிரண்டின் கவிதையோ இனியயிசை தனைப்பாட
உதடுகளின் செஞ்சிவப்பு ஓவியம் தனைத்தீட்ட
அதரத்தில் அந்திமாலை அருஞ்சிவப்பு பளபளக்க
மதுக்கிண்ணம் கவிழ்ந்துவெண் முத்துக்கள் சிந்துது
----இப்பொழுது கலிவிருத்தம் தரவு கொச்சகக் கலிப்பா வடிவில்