நிலன்நோக்கா தென்னைநீ நோக்கு

நிலம்பார்த்து நின்றிடும் நெற்பயிர் நாணி
நிலம்பார்த்து நீயுமேன் நின்றிட வேண்டும்
குலப்பெண் குணத்தினின் குன்றேநான் பார்க்க
நிலன்நோக்கா தென்னைநீ நோக்கு
----இன்னிசை வெண்பா

நிலம்பார்த்து நின்றிடும் நெற்பயிர் நாணி
நிலம்பார்த்து நீயுமேன் நின்றிட வேண்டும்
குலப்பெண்ணின் குணத்தினின் குன்றுநான் பார்க்க
நிலன்நோக்கா தென்னைநீ நோக்கிடு கண்ணே

---எதுகை மோனைகள் பொலிய
காய் விளம் விளம் மா வாய்ப்பாடு அடிதோறும் அமைந்து வர
புனைந்த கலிவிருத்தம்

நிலம்பார்த்து குனிந்திருக்கும் நெற்பயிர் நாணத்தில்
நிலம்பார்த்து பயிர்போலேன் நீநிற்க வேண்டும்சொல்
குலப்பெண்ணின் குணத்தினின் குன்றுநான் பார்க்குங்கால்
நிலன்நோக்கா தென்னைநீ நோக்கிடுவாய் எனதுகண்ணே

----வெண்பா விருத்தத்திலிருந்து
கலித்தளை மேவி வந்த தரவு கொச்சகக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (23-Nov-23, 10:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே