வாராளோ அவள் கேட்டுவா

நீரோடும் நல்லாற்றின் நீள்கரையில் நாணலாடும்
கூரான பூவிழியாள் கண்களில் மின்னலோடும்
ஏரோடும் நல்வயலில் ஏறித்துள் ளும்மீனே
வாராளோ வஞ்சிகேட்டு வா

------இன்னிசை வெண்பா

நீரோடும் நல்லாற்றின் நீள்கரையில் நாணலாடும்
கூரான பூவிழியாள் கண்ணிரண்டில் மின்னலோடும்
ஏரோடும் நல்வயலில் ஏறித்துள் ளும்மீனே
வாராளோ வஞ்சிகேட்டு வாசேற்றில் கால்நனைக்க

----எதுகை மோனை எழிலுடன் முற்றிலும் காய்ச் சீரால்
ஆன கலிவிருத்தம்

நீரோடும் நதியினின் நீள்கரையில் நாணலாட
கூரான எழில்விழியாள் விழியிரண்டில் ஒளிமின்ன
ஏரோடும் வயலினில் ஏறிநீந்தும் இளமீனே
வாராளோ அவள்கேட்டு வாசேற்றில் கால்நனைக்க

---காய்முன் நிரை வரும் கலித்தளையாலும்
எதுகை மோனையுடன் மாச்சீர் விளங்கனிச் சீர்
தவிர்த்த தரவு கொச்சகக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (23-Nov-23, 8:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே