நிலவு எழிலாள் நிலவில் துயில்வாள்

நிலவு எழிலாள் நிலவில் துயில்வாள்
புலரும் இளங்காலை போதில் விரியும்
மலரோடு கண்கள் விரியச் சிரிப்பாள்
மலரவள் மௌன விழி
---வெண்பா
நிலவு எழிலாள் நிலவில் துயில்வாள்
புலரும் காலை பொழுதில் விரியும்
மலரோ டுகண்கள் விரியச் சிரிப்பாள்
மலராள் மௌன விழியாள் மகிழ்ந்து

-----எதுகை மோனை முற்றிலும் மாச்சீர்
கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-23, 9:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே