பூம்புனல்போல் புன்னகை செவ்விதழில்

குங்குமம் செங்கதிர்போல் தோன்றிடும் நெற்றியில்
பொங்கிடும் பூம்புனல்போல் புன்னகை செவ்விதழில்
கங்கை சுமந்தவன் பாதியுந்தன் அங்கத்தில்
தங்கம்மே என்நெஞ்சத் தில்

--இன்னிசை வெண்பா

குங்குமமோ செங்கதிர்போல் தோன்றிடும் நெற்றியிலே
பொங்கிடுமே பூம்புனல்போல் புன்னகையும் செவ்விதழில்
கங்கையாறு சுமந்தவனின் பாதியுந்தன் அங்கத்தில்
தங்கம்மே என்நெஞ்சத் தில்நீயுன் இருப்பிடமாய்

---மூன்றாம் சீர் மோனை அழகுடனுடனும் முதற் சீர் எதுகை
எழிலுடனும் அன்னையின் அழகுடனும் பொலியும் முற்றிலும்
காய்ச் சீரால் புனைந்த கலிவிருத்தம்

குங்குமமோ சிவந்தசுடர் போல்தோன்றும் நெற்றியிலே
பொங்கிடுமே புதுப்புனல்போல் புதுச்சிரிப்பு கனியிதழில்
கங்கையாறு சுமந்தவனின் பாதியுந்தன் உடல்தனிலே
தங்கம்மே எனதுநெஞ்சத் தில்யுந்தன் இருப்பிடமாய்

----கலித்தளை மிகுந்து வரப்புனைந்த தரவு கொச்சகக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (25-Nov-23, 9:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே