கருத்துடன் வாழ்ந்தா லன்றோ கருதிய வின்பஞ் சேரும் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
தெருட்டியே வாழும் வாழ்க்கை
..தீதெனச் சொல்வேன் நானே;
உருட்டியே புரட்டும் பொய்ய
..ரோங்கியே வாழ்த லுண்டோ?
பெருக்கிடு மன்பி னாலே
..பேதைமை நீக்கி வாழ்வோம்;
கருத்துடன் வாழ்ந்தா லன்றோ
..கருதிய வின்பஞ் சேரும்!
- வ.க.கன்னியப்பன்