கவிதைப்பூந் தமிழிருக்க கண்ணெதிரில் நீயும்
கவிதைத் தமிழிருக்க கண்ணெதிரில் நீயும்
புவியினைச் சுற்றும் புதுநிலாவும் நிற்க
பவழயிதழ் புன்னகையில் பூவேநீ பார்த்தாய்
சுவைக்கவிதை வந்ததுதேன் போல்
கவிதைப்பூந் தமிழிருக்க கண்ணெதிரில் நீயும்
புவிதன்னச் சுற்றுகின்ற புதுநிலாவும் நிற்க
பவழச்செவ் விதழ்ச்சிரிப்பில் பூவேநீ பார்த்தாய்
சுவைக்கவிதை வந்ததுதேன் போன்றேஎன் தேனே
--------காய் காய் காய் மா கலிவிருத்தம்
கவிதைப்பூந் தமிழிருக்க கண்ணெதிரில் நீயும்
புவிதன்னச் சுற்றுகின்ற புதுநிலாவும் நிற்க
பவழச்செவ் விதழ்ச்சிரிப்பில் பூவேநீ பார்த்தாய்
தவழும்பா வந்ததுதேன் போன்றேஎன் தேனே
------புளிமாங்காய் காய் காய் மா கலிவிருத்தம்