பொற்சிலையே செந்தமிழ் கொண்டு செதுக்குவேன்

கற்பனைக்கு நெஞ்சு கவிதைக்கு வான்நிலவு
சிற்பியை யும்செதுக்கத் தூண்டிடும்நீ செந்நிறப்
பொற்சிலையே செந்தமிழ் கொண்டு செதுக்குவேன்
சற்றமர்ந்து மெல்லச் சிரி
----இன்னிசை வெண்பா

கற்பனைக்கு நெஞ்சு கவிதைக்கு வான்நிலவு
சிற்பியை யும்செதுக்கத் தூண்டிடும்நீ --அற்புத
பொற்சிலையே செந்தமிழ் கொண்டு செதுக்குவேன்
சற்றமர்ந்து மெல்லச் சிரி
-----நேரிசை வெண்பா

கற்பனைக்கு என்நெஞ்சு கவிதைக்கு வான்நிலவு
சிற்பியையும் செத்துக்கத் தூண்டிடும்நீ செந்நிறத்து
பொற்சிலையே செந்தமிழைக் கொண்டுன்னைச் செதுக்கிடுவேன்
சற்றமர்ந்து மெல்லத்தான் சிரித்திடுவாய் எழில்நிலவே

-----அடிதோறும் முதற்சீர் கூவிளங்காய் பிற காய் காய் காய்
என அமைந்த எதுகை மோனையுடன் பொலியும் கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Nov-23, 10:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே