விழியினிலே காதல் எழுதி

தோட்டத்துப் பூக்களெல்லாம் தொல்காப் பியம்பேசி
வாட்டமின்றி பூத்திடும் வெண்பா மலர்களாய்
காட்டும் விழியினில் காதல் எழுதிநீ
தீட்டுவாய்வெண் புன்னகைப் பா
------இன்னிசை வெண்பா
---------------------------------------------------------------------------------------------------------------------------
தோட்டத்துப் பூக்களெல்லாம் தொல்காப் பியம்பேசி
வாட்டமின்றி பூக்குதுபார் வெண்பா பூக்களாக
காட்டிடிடும் விழியினிலே காதல் எழுதிநீயும்
தீட்டுவாய்புன் னகைவெண்பா பூந்தேன் செவ்விதழே

-----காய் காய் தேமா காய் வாய்ப்பாடு
இதில் முதற் சீர் தேமாங்காய் பிற முதற் சீர் கூவிளங்காய்
முதற் சீரையும் கூவிளங்காய் ஆக்கி வடித்த கலிவிருத்தம் கீழே
தொடை பாற்படும் முதற்சீர் ஒரே எதுகை மூன்றாம் சீர் மோனை
இப்பா பாவின வடிவங்களுக்கு இலக்கிய இனிமை தருகிறது

தோட்டமதில் பூக்களெல்லாம் தொல்காப் பியம்பேசி
வாட்டமின்றி பூக்குதுபார் வெண்பாப் பூக்களாக
காட்டிடிடும் விழியினிலே காதல் எழுதிநீயும்
தீட்டுவாய்புன் னகைவெண்பா பூந்தேன் செவ்விதழே

-----இப்பொழுது முதற்சீர் அனைத்தும் ஒரே கூவிளங்காய்

-----காய் காய் தேமா காய் வாய்ப்பாடு
இதில் முதற் சீர் தேமாங்காய் பிற முதற் சீர் கூவிளங்காய்
முதற் சீரையும் கூவிளங்காய் ஆக்கி வடித்த கலிவிருத்தம் கீழே
தொடை பாற்படும் முதற்சீர் ஒரே எதுகை மூன்றாம் சீர் மோனை
இப்பா பாவின வடிவங்களுக்கு இலக்கிய இனிமை தருகிறது
======================================================================

தோட்டமதில் மலர்களெல்லாம் தென்தொல்காப் பியம்பேசி
வாட்டமின்றி மலருதுபார் வளர்வெண்பா மலர்களாக
காட்டிடிடும் விழியினிலே காதலைநீ எழுதுவாய்
தீட்டுவாய்புன் னகைவெண்பா சுவைத்தேன்பூ செவ்விதழே

-----காய் முன் நிரை வரும் கலித்தளை சாலமிகுத்துப் பெய்து
மாற்றிய வடிவம் தரவு கொச்சகக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-23, 9:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 99

மேலே