கயல்துள்ளிடும் விழி காதலில் நீந்த

கயல்துள் ளும்விழி காதலில் நீந்திட
மயக்கும் மாலையோ மஞ்சள் பொழிந்திட
தயங்கு வதேனோநீ தோட்டம் வந்திட
பயமேன் வந்தமர் பக்கத் தினில்கயல்

---இது ஒருவகை கலிவிருத்தம்
வில்லிப்புத்தூரார் எடுத்துக்காட்டு விருத்த அமைப்பில்
டாக்டர் குறிப்பிட்ட விளக்க வழி அமைக்கப்பட்டது

--------------------------------------------------------------------------------------
Dr.V.K.Kanniappan • 3 மணி நேரத்திற்கு முன்
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு
சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று
ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
(1, 3 சீர்களில் மோனை)

திரைகொ ழித்திடும் சிந்துவின் சூழலில்,
குரக தத்தடந் தேர்போய்க் குறுகலும்,
மரக தக்கொண்டல் மாதலிக் கன்பினால்,
விரகு றச்சில மாற்றம் விளம்பினான்!

எழுதியவர் : கவின் சாரலன் (27-Nov-23, 3:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே