கதகதப்பான அணைப்பு

இமைமூடி தியானிக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன் அணைப்பின்
கதகதப்பு கருத்தில்
நிழலாடும்.....

உதிராமல் நிறுத்த
உறுதியாக போராடியும்
இயலாது தடுமாறும்,
பரபரக்கும் மனம்
கண்ணீரில் நனைந்து.....

நிந்திக்கும் கடவுளை
யென்மனம்,அரணாக
காத்து நின்றிருந்த
காவல் தெய்வத்தைக்
கவர்ந்த கயமைக்காக.....

ஈரேழு ஜென்மத்திலும்
உன்னை போன்ற
அன்பான அரணை
காண்பது அரிது
ஆயிற்றே....

எனக்காகவே வாழ்ந்த,
சிரித்த வண்ண
நிலவாக நடமாடிய
தந்தையின் இழப்பை
ஈடெதுவும் செய்யுமா..???

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Nov-23, 6:09 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 43

மேலே