யாவரும் கேளிர்

யாவரும் கேளிர்
×××××××××××××××××

யாதும் ஊரே யாவரும் கேளிர் /
சாதி மத பேதமின்றி ஒற்றுமையாக/
சமாதான வாழ்வே வானத்தைப் போல் /
நிலையானது ஏற்ற தாழ்வுகள் இல்லாதது /
நன்மை தீமைகள் செய்கையால் வருபவை /

மனிதநேயம் வளர்த்து வீழ்ந்தோர்க்கு உதவிகள்/
மனிதனாய் பிறந்த ஆறறிவுடையான் செய்திடல் /
வேண்டும் - பணம் பதவியுடன் ஆணவம்/
வேண்டாம் இவைகள் நிரந்தரம் இல்லை/
அன்புடன் பழகும் நட்பே நிரந்தரம்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (29-Nov-23, 9:58 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : yavarum kelir
பார்வை : 85

மேலே