தொட்டு விடும் தூரம்

தொட்டு விடும் தூரம்
------------------------------------
மண்ணில் விதைத்த விதையாக எழுந்திரு/
மலையின் பாறையை வெடியால் தகர்ப்பதைபோல்/
தடைகளை வெற்றியென்ற ஆயுதத்தால் தகர்த்திடு/
தன்னம்பிக்கை சுறுசுறுப்பை எறும்பிடம் கற்றுக்கொள்/

முகமதுகஜினி பதினெட்டு முறை தோற்றாலும் /
முயற்சியால் போராடி வெற்றி பெற்றார் /
ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்ததும் /
அக்னி ஏவுகனையில் கலாமின் சாதனையும் /
விட முயற்ச்சியின் தளராத உழைப்புகள் /

தன்னம்பிக்கை வளர்ந்தால் சரித்திரம் படைப்பார் /
தன்னம்பிக்கை தொலைந்தால் தரித்திரத்தில் வீழ்வார் /
முயற்சித்து தோற்பது தோல்வி அல்ல/
முயற்சியின் வெற்றியில் தோல்வியை முறியடித்து /

கண்டிடும் வெற்றியால் தொட்டிடுவோம் வான் /
கொண்ட மேகத்தில் மறைந்திருக்கும் நிலவை/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Nov-23, 5:24 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 355

மேலே