பணக்கார பெண்ணுக்கு இல்லத்தரசர் தேவை

உயர்கல்வி கற்று மாதம் இரண்டு இலட்சம் வருமானம் சம்பாதிக்கும் 25 வயதுள்ள அழகான பணக்காரப் பெண்ணுக்கு இல்லத்தரசராக வாழ விரும்பும் அழகான மணமகன் தேவை.
மணமகன் தகுதி:
ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற வேலையில்லாத அழகான இளைஞராக இருக்க வேண்டும். வீட்டு வேலைகள் செய்வதில் திறமை அவசியம். தமிழ்ப் பெயர் உள்ள இளைஞர்கள் மற்ற தகுதிகள் இருந்தாலும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை திறமையாக இயக்குவதில் தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் அவசியம்.
தேர்ந்தெடுக்கப்படும் மணமகன் இல்லத்தரசர் என்ற தகுதியோடு கண் கலங்காமல் கவனித்துக் கொள்ளப்படுவார்.