மனிதநேயம்
மனிதநேயம்
-----------------------
கருப்பையில் சுமந்தவள் தெருவின் ஓரத்தில் /
கருவறைத் தெய்வம் தங்கத் தேரினிலே /
மனிதன் உருவாக்கிய கடவுளுக்குத் தங்கத்தினாலங்கி /
மனிதனாய் பெற்றப் பெற்றோர்க்கு உடைகளில்லை /
திருவோடு ஏந்திடும் பிள்ளைகள் பசியோடு வெளியே/
திருவாய் அருளும் கடவுளுக்குப் படையல் உள்ளே /
பள்ளியறைத் தெய்வம் பஞ்சனையில் உறக்கம் /
பிணியுடன் செல்வோருக்கு அரசு மருத்துவமனையில் /
படுக்கைகளோ சுத்தமற்ற குளிர்ந்த தரையில் /
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்/
ஏணியாக உயரட்டும் மனிதனுக்குள் மனிதநேயம்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்