மணமகன் பிரஞ்சல் -- மணமகள் பிரஞ்சல்
என்னடா அன்பரசு கையில?
@@@@@
என்கூட வேலை பார்க்கிற பையன். அவனோட திருமண அழைப்பிதழ்.
@@###
கொண்டா பாக்கலாம்.
@@@@@
இந்தாம்மா.
@@@@@@@
(திருமண அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்த பின்பு):
என்னடா இது. மணமகன் மணமகள் இரண்டு பேருக்கும் ஒரே பேரு. பொண்ணு மாப்பிள்ளை இரண்டு பேரும் இந்தி பேசறவங்களா?
@@@##@@@
மாப்பிள்ளை பிரஞ்சலுக்கு இந்தி தெரியாது. அவன் மணக்கப் போற பெண் பிரஞ்சலுக்கும் இந்தி தெரியாது. இரண்டு பேரும் முதுகலை தமிழ்ப் பட்டதாரிகள். இருவரும் தமிழ் ஆசிரியர்கள்.
@@@@@@@@
அதெப்படி மாப்பிள்ளையும் பிரஞ்சல் - பொண்ணு பேரும் பிரஞ்சல்.
@@@@@@@@
அம்மா, 'பிரஞ்சல்'ங்கிற இந்திப் பேரை ஆண் பிள்ளைகளுக்கும் வைக்கலாம். பெண் பிள்ளைகளுக்கும் வைக்கலாம்.
@#@@###
ஓ.... அப்பிடியா. என்ன செய்யறது. தமிழ்ப் பேருங்களுக்கு கடுமையான பஞ்சம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Pranjal = Simple, Honest and dignified, or dignified. Unisex name.