காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 16

கூடுவிட்டு பிரிந்த கிளி


கண்ணுக்குள் வைத்து வளர்த்த தன் மகள் தன் அணைப்பில் இருந்து விலகியது கண்டு நொறுங்கி போனார் கோபால கிருஷ்ணன்.

மனதில் எழுந்த தடுமாற்றம் விழியில் நீராக துளிர்த்தது.

நிமிர்ந்து நின்று தீர்மானத்துடன் தன்னை பார்க்கும் தன் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவர் மனதின் தடுமாற்றத்தை வெளிக்காட்டாமல் இருப்பது தான் நல்லது என்று மனதில் முடிவெடுத்து வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டார்.

தந்தையின் மனதை நன்றாக புரிந்து வைத்திருக்கும் திலோத்தமா இதை மட்டும் புரிந்து கொள்ளாமல் இருப்பாளா.

நன்றாக புரிந்தும் வெளிக்காட்டாமல்
இருக்க வேண்டிய சூழ்நிலையில் திலோத்தமா இருந்தாள்.

அவரின் மனநிலை புரிந்து நெருங்கினால் அவரின் பிடிவாதத்தை ஏற்று கண்ணனை விட்டுத் தர வேண்டும்.

எந்த காரணத்தை முன்னிட்டும் கண்ணனை விட்டுத் தர அவள் தயாராக இல்லை என்று எண்ணியவாறு மேல் என்ன செய்ய என்று புரியாமல் தயங்கினாள்.

திலோத்தமா...... என்ற அம்ரித்வாணியின் அதட்டல் கேட்டு அவள் உடல் தன்னிச்சையாக நடுங்கியது அவள் கைகள் தானாக கண்ணனை இறுக்கி அணைத்தது.

அழுத்தமான அடிகளை வைத்து திலோத்தமா வை நெருங்கிய அவள் தாய்....

உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க உன் இஷ்டம் போல நடக்க இது ஒன்றும் சத்திரம் இல்லை அந்த பிள்ளையை இப்பவே மரியாதையா அவங்க கிட்ட கொடுத்துட்டு உள்ள போ.....

இல்லம்மா நா நா கண்ணனை விட்டுத் தர முடியாது என்று தாயின் மீதிருந்த பயத்தை வெளிக் காட்டாது நா குழற கூறினாள்.

ஏய் என்ன திமிரா என்று அம்ரித்வாணி ஏதோ கூற வருவதற்குள்...

கோபாலகிருஷ்ணன் விட்டு விடு வாணி, ஆனால் ஒன்று என் பேச்சைக் கேட்காதவர்கள் யாரும் என் வீட்டில் இருக்க முடியாது என்று வீடே அதிர முழங்கினார்.

கஜா அவளை இந்த வீட்டை விட்டு வெளியே போகச் சொல்....

ஐயா பாப்பா எதோ தெரியாம, நான் எடுத்து சொல்லி புரிய வைக்கிறேன் ஐயா
திடீர்னு வெளிய அனுப்புனா எங்க ஐயா போகும் பிள்ளை....

கொஞ்சம் மனசு வைங்க ஐயா என்று கோபாலகிருஷ்ணன் கால்களில் போய் விழுந்தார் கஜலெஷ்மி.

இவை யாவற்றையும் கண்டு ஸ்தம்பித்து ஒன்றும் கூறாமல் நின்ற கமிஷனர் வினோத் தன் நண்பனை திரும்பிப் பார்த்தார்.

இறுகிய தன் நண்பனின் முகமே கூறியது அவன் இந்த விஷயத்தில் ஒருபோதும் இளகப் போவதில்லை என்று.

நண்பனும் அவன் மகளும் எதிரெதிர் துருவங்களாக நிற்பதைப் பார்த்து உருவான வருத்தம் ஒரு கையாலாகாத பெருமூச்சாக வெளிவந்தது.

அவரவர் முடிவை விருப்பம் போல் தெரிவித்து விட்டனர் ஆனால் நானும் என் இஷ்டம் போல் எது வேண்டுமானாலும் செய்ய முடியாதே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே திலோத்தமா வை நோக்கி பெருமூச்சுடன் ஓர் அடி எடுத்து வைத்தார்.

திலோம்மா ஆனால் நான் இதில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்றார் கமிஷனர் மெதுவாக.

திலோத்தமா நன்கு அறிவாள் இது போன்ற ஆக்ஸிடென்ட் இல் யாரும் இல்லாமல் அனாதரவான சூழ்நிலையில் அதுவும் குறிப்பாக சிறு குழந்தைகள் என்றால் சட்டப்படி குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று.

கண்ணனை சட்டப்படி தன்னவனாக ஆக்கிக் கொள்ளும் முடிவில் திலோத்தமா நிலையாக நின்றாள், ஆகையால் கமிஷனர் அவளிடம் அவர் பங்குக்கு பேசிப் பார்த்ததில் அவள் தெளிவான முடிவுடன் இருப்பதை சந்தேகத்திற்கு இடம் இன்றி அறிந்து கொண்டார்.


**********************

பிரியம்வதா மனம் கொள்ளா மகிழ்ச்சி பிரவாகத்தில் முக்குளித்து நாணமதில் நனைந்த புத்தம்புது செங்காந்தல் மலராக தோன்றினாள் பாரதிதாசனின் கண்களுக்கு.

காணக் காண திகட்டவில்லை அவனுக்கு. விழிகளை அகற்ற இயலாது தன் உயிரின் முகத்தையே மொய்த்தது அவன் பார்வை.

அதுவும் அவன் பார்த்துப் பார்த்து அவளுக்காக தேர்ந்தெடுத்த மயில் கழுத்து வண்ண பட்டுப் புடவையில் தோகை விரித்த மயிலை விட அழகாக தோன்றினாள் அவன் தேவதை.

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கேக் வெட்டி அனைவருக்கும் தன் கைகளால் ஊட்டி விட்டால் தான் அவளுக்கு முழு திருப்தி. வருடம் தவறாமல் அவள் செய்யும் வழக்கம் இது. அதுவும் இந்த வருடம் ஒரு புதிய வரவும் இருக்கவே பிரியம்வதாவின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிட்டது.

பாரதிதாசனும் தன்னவளை மகிழ்வித்து அதிலேயே மனம் மகிழ்பவன் என்பதால் அவனுமே சந்தோசத்தில் மிதந்து கொண்டு தான் இருந்தான் எனலாம்.

குழந்தைகள் எல்லாம் பிரியாவை மொய்த்துக் கொண்டனர் அவளிடம் கேக்கை ஊட்டிக் கொள்ள, மெல்ல மெல்ல ஒருத்தரை ஒருத்தர் தள்ளி விடாம வந்து வாங்கிக்கனும் அக்கா எல்லாருக்கும் கேக் தருவேன் சரியா என்று பேசியபடியே அவளுக்கு மிகவும் பிடித்தமான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கை அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டிக் கொண்டு இருந்தாள்.

அவளின் நிகரில்லா மகிழ்ச்சியில் மனதைப் பறி கொடுத்திருந்தான் பாரதிதாசன்.

தன்னை அறியாத அகலச் சிரிப்புடன் கண்கள் மின்ன பிரியாவையே பார்த்தபடி ஓர் ஓரம் நின்றிருந்த பாரதிதாசனை , விழிகள் பனிக்க மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்த யசோதம்மா, அவர் நித்தம் வழிபடும் கண்ணனைப் பார்த்து மனதால் நன்றி கூறினார்.

இது எதையுமே கவனிக்காது சிறு குழந்தைகளுடன் குழந்தையாக மாறி கைகொட்டி சிரித்துக் கொண்டு இருந்தாள் பிரியம்வதா.

யார் இந்த பிரியம்வதா, பாரதிதாசன், யசோதம்மா என்று நீங்கள் குழம்புவது எனக்கு புரிகிறது அடுத்த பாகத்தில் அதற்கான விடையுடன்.


மீண்டும் சந்திப்போம்.....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (17-Dec-23, 10:05 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 31

மேலே