தாமரைப்பூவென நீவந்தாய் பூக்கள் மகிழுதுபார்

பா

பூமலரும் நேரமிது பூபாளம் கேட்டிடும்
பூமலர்த் தோட்டமெலாம் புன்னகை யில்குலுங்க
தேமலர்கள் தென்றலுடன் கைகோர்த்தா டும்போது
தாமரை நீயும்வந் தாய்
-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
பூமலரும் நேரமிது பூபாளம் கேட்டிடும்
பூமலர்த் தோட்டமெலாம் புன்னகையில் -பூமகள்
தேமலர்கள் தென்றலுடன் கைகோர்த்தா டும்போது
தாமரையாய் நீயும்வந் தாய்

----ஒருவிகற்ப நேரிசை வெண்பா
பாவினம்
பூமலரும் நேரமிது பூபாளம் கேட்டிடும்கேள்
பூமலரும் தோட்டமெலாம் புன்னகையில் பூமகளாய்
தேமலர்கள் தென்றலுடன் கைகோர்த்தா டும்போது
தாமரையாய் நீயும்வந் தாய்பூக்கள் மகிழுதுபார்

----முற்றிலும் காய்ச் சீரிலான கலிவிருத்தம்

பா
பூமலரும் பொழுதிது பூபாளம் இசைக்குதுகேள்
பூமலரும் எழில்தோட்டம் புன்னகையில் நடமாடுது
தேமலர்கள் தென்றலுடன் கைகோர்த்தே அசைந்தாட
தாமரைப்பூ வெனநீவந் தாய்பூக்கள் மகிழுதுபார்

---காய்முன் நிரை வரும் கலித்தளை மிகுந்து வர
அமைத்த தரவுக் கொச்சகக் கலிப்பா

பாக்காக்களை பலவிதமாக மாற்றி அமைக்கப்பட்ட வடிவங்களே
பாவினங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Dec-23, 8:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே