மணியோசை கேட்டிடும்மென் மார்கழியின் இளம்காலை

மணியோசை கேட்டிடும் மார்கழிக் காலை
மணிக்கதவம் தாள்திறக்க மங்கையர் எல்லாம்
மணிமலர் பூவிதழால் நல்லிசை பாட
அணிசேர்ந்து செல்லும் அழகு

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

மணியோசை கேட்டிடும்மென் மார்கழியின் காலையிலே
மணிக்கதவம் தாள்திறக்க மங்கையர்கள் எல்லோரும்
மணிமலர்மென் பூவிதழால் நல்லிசையை பாடுதற்கு
அணிசேர்ந்து மலரேந்தி ஆலயம்செல் லுமழகுபார்

----அனைத்தும் காய் அமைந்த கலிவிருத்தம்

மணியோசை கேட்டிடும்மென் மார்கழியின் இளம்காலை
மணிக்கதவம் தாள்திறக்க மங்கையர்கள் அனைவருமே
மணிமலர்மென் பூவிதழால் நல்லிசையை பாடுதற்கு
அணிசேர்ந்து மலரேந்தி ஆலயம்செல் லுமழகுபார்

----கலித்தளை மிகுந்த தரவு கொச்சகக் கலிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (21-Dec-23, 9:57 am)
பார்வை : 69

மேலே