வெண்ணிலா நல்லிரவில் யமுனைக் கரையினிலே 2
கண்ணன் குழலிசை காற்றில் மிதந்துவர
கண்ணனைத் தேடியே காதலிரா தைவந்தாள்
கண்ணனின் மார்பினில் சாய்ந்தாள் மயங்கியே
வெண்ணிலா நல்லிர வில்
-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
கண்ணன் குழலிசை காற்றில் மிதந்துவர
கண்ணனிடம் வந்தாள்ரா தைதேடி -- கண்ணெழிலாள்
கண்ணனின் மார்பினில் சாய்ந்தாள் மயங்கியே
வெண்ணிலா நல்லிர வில்
---ஒரு விகற்ப நேரிசை வெண்பாவாக
==============================================================
கண்ணனின் குழலிசை காற்றினிலே மிதந்துவர
கண்ணனைத் தேடியே காதலிரா தைவந்தாள்
கண்ணனின் மார்பினில் சாய்ந்தாளே மெய்மறந்து
வெண்ணிலா நல்லிர வில்யமுனைக் கரையினிலே
---கூவிளம் விளம் காய் காய் கலிவிருத்தம்
காய் முற்றிலும் அமைந்த கலிவிருத்தம் கீழே
கண்ணனின்மென் குழலிசைஇன் காற்றினிலே மிதந்துவர
கண்ணனிடம் ஓடோடி காதலிரா தைவந்தாள்
கண்ணனின்பூ மார்பினிலே சாய்ந்தாளே மெய்மறந்து
வெண்ணிலவு நல்லிரவில் யமுனைநதிக் கரையினிலே
----கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தமாக
எதுகை மோனை அழகுடன்
கண்ணனின்மென் குழலிசைஇன் காற்றினிலே மிதந்துவர
கண்ணனிடம் ஓடோடி காதலிரா தைவந்தாள்
கண்ணனின்பூ மலர்மார்பில் சாய்ந்தாளே தனைமறந்து
வெண்ணிலவு இரவினிலே யமுனைநதிக் கரையினிலே
----காய்முன் நிரை நிற்கும் ஏழு கலித்தளை அமைத்து
உருவாக்கப் பட்ட தரவு கொச்சகக் கலிப்பா