வெண்ணிலா நல்லிரவில் யமுனைக் கரையினிலே

கண்ணன் குழலிசை காற்றில் மிதந்துவர
கண்ணனைத் தேடியே காதலிரா தைவந்தாள்
கண்ணனின் மார்பினில் சாய்ந்தாள் மயங்கியே
வெண்ணிலா நல்லிர வில்

-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

கண்ணனின் குழலிசை காற்றினிலே மிதந்துவர
கண்ணனைத் தேடியே காதலிரா தைவந்தாள்
கண்ணனின் மார்பினில் சாய்ந்தாளே மெய்மறந்து
வெண்ணிலா நல்லிர வில்யமுனைக் கரையினிலே

---கூவிளம் விளம் காய் காய் ---அடிதோறும் பொலிந்து வர
அமைந்த கலிவிருத்தம் ஒருவிகற்ப எதுகையும் முன்றாம் சீர்
மோனையும் இப்பா பாவினங்களின் சிறப்பழகு

எழுதியவர் : கவின் சாரலன் (23-Dec-23, 8:09 am)
பார்வை : 51

மேலே