மலர்த்தோட்டத்தில் நான்கண்ட அவள்
கைகளில் அணிந்த வளையல்கள் கிண்கிணிக்க
கன்னியவள் சிற்றருவிபோல் துள்ளித் துள்ளி
முன்னழகு குலுங்க அழகே உருவாய்
வந்தாள் வந்து பூத்து குலுங்கும்
மலர்ச்சோலையில் தாமரைக்கையாள் பூப்பறித்தாள்
இவள் கைகள் ஸ்பிரிசத்தால் பூக்களெல்லாம்
தம்முள் கட்டிவைத்த தேனெல்லாம் சிந்தினவே
அதை நோட்டமிட்டு கருவண்டு கூட்டம்
ரீங்காரம் செய்து மொய்த்தன ஆங்கு
சிற்றிடையாள் மெல்ல நகர்ந்தாள் அங்கிருந்து
என்னுள்ளத்தைத் தீண்டினாள் திகைத்து நின்றேன் நானே
மன்மதனும் மயங்கும் மங்கை அவளைக் கண்டு