என்னைநீ பாடாயோ

தென்றல் விளையாடும் தேன்மலர்த் தோட்டத்தில்
மென்மையின் வெண்மையின் மல்லிகைப் பூச்சிரிக்க
என்னைநீ பாடாயோ என்றதே அன்றலர்ந்த
சின்னமலர் ஒன்று சிரித்து

---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

தென்றல் விளையாடும் தேன்மலர்த் தோட்டத்தில்
மென்மல் லிகைசிரிக்க வெண்மையில் --அன்பனே
என்னைநீ பாடாயோ என்றதே அன்றலர்ந்த
சின்னமலர் ஒன்று சிரித்து

----ஒருவிகற்ப நேரிசை வெண்பா

தென்றலாடி விளையாடும் தேன்மலர்கள் தோட்டத்தில்
மென்மையிலே வெண்மையிலே மல்லிகைவெண் பூச்சிரிக்க
என்னைநீயும் பாடாயோ என்றதன்பில் அன்றலர்ந்த
சின்னமலர் ஒன்றுமெல்லச் சிரித்துவிட்டு தோழிநீசொல்

----கூவிளங்காய் காய் காய் காய் கலிவிருத்தம்
ஒருவிகற்ப எதுகை பொழிப்பு மோனை பொலிந்து வரும் அழகை
கவிதைகளில் காணவும்

---விருத்தத்தில் சின்ன மலர் கவிஞனை பாடெனக் கேட்க கவிஞன்
தோழியைக் கேட்கிறான்
மலர்களை விடுத்து தோழி என்னை முதலில் பாடு என்று சொல்லக்கூடும்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Dec-23, 8:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே