மல்லிகைப் பந்தலில் மெல்லவீசும் தென்றலே

மல்லிகைப் பந்தலில் மெல்லவீசும் தென்றலே
நில்லாமல் போதல் நியாயமா பூங்காற்றே
சொல்வாய் அவளின்னும் தோட்டம் வரவில்லை
நில்லென்போல் காத்திரு நீ

-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

மல்லிகைப் பந்தலில் மெல்லவீசும் தென்றலே
நில்லாமல் போதல் நியாயமா -- சில்காற்றே
சொல்வாய் அவளின்னும் தோட்டம் வரவில்லை
நில்லென்போல் காத்திரு நீ

----ஒரு விகற்ப நேரிசை வெண்பா

மல்லிகைப்பூ பந்தலிலே மெல்லவீசும் இளம்தென்றல்
நில்லாமல் செல்லுவது நியாயமாபூ இளம்காற்றே
சொல்வாய்நீ அவளின்னும் பூந்தோட்டம் வரவில்லை
நில்லென்போல் காத்திருநீ என்னுடன்பூங் கவிபாடு

-----முற்றிலும் காய் அமைந்த கலிவிருத்தம்

மல்லிகைப்பூ பந்தலிலே மெல்லவீசும் இளம்தென்றல்
நில்லாமல் செல்லுவது நியாயமாபூ இளம்காற்றே
சொல்வாய்நீ அவளின்னும் பூந்தோட்டம் வரவில்லை
நில்லென்போல் வரும்வரைநீ என்னுடன்பூங் கவிபாடு

----ஏழு கலித்தளை பெற்று தரவு கொச்சகக் கலப்பாவாக
காய் முன் நிரை வரின் கலித்தளை
ஒருவிகற்ப எதுகையும் மோனையும் இப்பா பாவினக் கவிதைகளின்
அழகு
பா வெண்பா தரவு கொச்சகக் கலிப்பா
பாவினம் கலிவிருத்தம்
யாப்பார்வலர்கள் பயில்வோர் கருதி இக்குறிப்புகள் தருகிறேன்
நல் யாப்பாசான் நல் நூல் வழி சரியாகத் தெரிந்து கொள்ளவும்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Dec-23, 8:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே