வாழ்க்கை ஒரு பயணம் எனும் போது
வாழ்க்கை ஒரு பயணம் எனும் போது..!
பந்தயம்
என்று நினைத்து
நெஞ்சு துடிக்க
நாக்கு உலர
உடலெல்லாம் வேர்த்து
ஓடி சென்று
எல்லை கோட்டை
தொட்டு
திரும்பி பார்த்தேன்
என் உடன்
வந்தவர்களில்
பலர் நின்றும்
ஆடி பாடி
பேசியபடி
சாவதானமாய்
வந்து கொண்டிருந்தனர்
இது ஓட்டபந்தயமில்லையா?
முதல் இறுதி
வேண்டாமா?
பிறகுதான் தெரிந்தது
இது வாழ்க்கை
பந்தயம்
நின்று நிதானித்து
வாழ்க்கை
பந்தயத்தை
அனுபவித்து
எல்லை கோட்டை
அடைந்து மறைந்து
போவது..!
அனுபவித்து வாழ்ந்து
நடந்து செல்லும்
வாழ்க்கைக்கு
நான் மட்டும்
ஏன் இந்த ஓட்டம்
ஓடி முடித்தேன்?

