மானம்

வலிகள் நிறைந்த உழைப்பு
வலிகள் நிறைந்த வறுமை
வலி நீக்கும் வழியே
நிம்மதியான தூக்கம்
தூக்கமே ஏழைகளின் வசந்தம் ..

பணம் தேடும் பணவெறியர்க்கு
சந்தோஷத்தை தருவதும் பணந்தான்
தூக்கத்தை தொலைத்து
நிம்மதியை கெடுப்பதும் பணந்தான்
வாழ்க்கையை தொலைக்கிறான்
பணத்தைத் தேடி ..

கோமணம் அவிழ்ந்தாலும்
போவாது மானம்
கோர்ட் சூட்டு
கிழிந்த நிமிடம்

பணக்கார வேஷம்
கலைந்து பறந்து
விடும் மானம் ..

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (27-Dec-23, 6:26 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : maanam
பார்வை : 49

மேலே