யதார்த்தம்

எதார்த்த மான வாழ்க்கை பதார்த்தம் தான்;
எதிர்க்கும் வாழ்க்கை நரகம் தான்;
எதார்த்தமாய் பேசி பழகினால் ஏமாற்றம் இல்லை தான்;
இயற்கையின் பரிணாமமே எதார்த்தான் தான்;
இயல்பாய் நடப்பது எல்லாம் எதார்த்தம் தான்;
கவலைகளையும் கவலைப்படாது சுமந்தால் யதார்த்தம் தான்;
கை மீறிப் போனாலும் கண்டும் காணாமல் போவது யதார்த்தம்;
கண்டதையும் நினைக்காது கட்டு கோப்பான வாழ்க்கையே யதார்த்தம் தான்;
கண்டதற்கெல்லாம் ஆசைப்படாது கவனமாய் வாழ்ந்தால் எதார்த்தம் தான்;
யதார்த்தம், எதார்த்தம் இதுவே நிதானாம் நிதர்சனம்;
புரிந்து வாழ்வதே எதார்த்தம்
பொடிபோட்டு பேசாது புன்னகையோடு பேசுவதே எதார்த்தம்;
புரிதளின் தெளிவே யதார்த்தம்;
எதார்த்தமான வாழ்க்கை எட்டிக்காயாகாது
எதார்த்தமான பேச்சில் விசமம் இருக்காது;
எதார்த்த மான செயலில் ஏமாற்றம் இருக்காது;
எதார்த்த வாதியிடம் தடுமாற்றம் இருக்காது;
எதார்த்தம் என்றும் ஏமாற்றப் பார்க்காது;
எதார்த்தத்தில் தனிமை இல்லை;
எதார்த்தத்தில் தன்னலம் இல்லை;
எதார்த்தத்தில் தடுமாற்றம் இல்லை;
எதார்த்தத்தில் தலைக்குனிவு இல்லை;
எதார்த்த பேச்சில் குதற்கம் குற்றம் குறை இல்லை;
எதார்த்தத்தில் அவமானம் இல்லை;
எதார்த்தத்தில் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லை
எதார்த்தமாய் செய்தால் யாருக்கும் இடையூறு இல்லை;
ஒடுக்கி ஒடுங்கி வாழ்ந்தால் எதார்த்தம் இல்லை ;
ஏய்த்து வாழ்வதை விட எதார்த்தமாய் வாழ்
இன்ப துன்பம் தெரியும்
எல்லா உயிரினங்களிடமும் கருணை பிறக்கும்;
எதிர்பாறாது நடப்பது எதார்த்தம்;
எட்டி நின்று வாழ்வது எதார்த்தம் அல்ல ;
ஒட்டி உறவாடி வெட்டி விடுவது எதார்த்தம் ஆகாது;
எட்டாத ஆசைக்கு ஏங்குவது எதார்த்தம் ஆகாது;
எக்கத்தில் தூக்கத்தைக்கெடுப்பது எதார்த்தம் ஆகாது;
கருங்கல் சிலையாகலாம்
கற்சிலை கருங்கல்லாகக் கூடாது
கரு சிசுவை சுமக்கலாம்
கருவந்த அறையையே
கல்லறை ஆகக்கூடாது;
இல்லை இல்லை என்ற வாழ்க்கையில் இல்லை எதார்த்தம்;
இருப்பதை பகிர்ந்து வாழ்வோம் என்றால் எதார்த்தம்;
அவசர வாழ்கையில் மறந்தது எல்லாம் எதார்த்தம்
வாழ்க்கை யதார்த்தத்தின் நெடும் பயணம்.
புத்திசாலிகள் படிக்கட்டும்;
திறமைசாலிகள் சாதிக்கட்டும்;
யதார்த்த வாதி சமாளிக்கட்டும்;
எதாத்த வாதி எமாளியாகமாட்டான்;
புத்தி சாலியும் திறமைசாலியும் ஏங்கியே சாவான்;
யதார்த்த வாதி தயகாங்காது
தாங்கியே வாழ்வான்;
எதார்த்தமாய் பழகு;
எதார்த்தமாய் வாழப் பழகு;
பிடித்தது போல் நடிக்காதே;
நல்லவனைப்போல் நடக்காதே;
விசுவாசத்தை விலைபேசாதே;
பிடிப்பின்றி வாழாதே;
பிடிவாதம் பிடிக்காதே;
ஊமையாய் இருப்பதை விட உண்மையாய் வாழப்பழகு;
யதார்த்தமாய் பழகு;
எதார்த்தமாய் வாழ்ந்து காட்டு

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (27-Dec-23, 2:05 pm)
Tanglish : yadhaarththm
பார்வை : 150

மேலே